வியட்நாமின் வடக்குப் பகுதியில் லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காணமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாமின் வடக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (17) அதிகாலை முவோங் தான் (Muong Than) கிராமத்தில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளபெருக்கு ஏற்பட்ட முவோங் தான் பகுதியில், மீட்புக் குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், காணமல்போன 4 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM