கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய பயணி கைது!

18 Jul, 2026 | 02:53 PM
image

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனது பயணப் பொதியில் சுமார் 90.8 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த மலேசிய நாட்டுப் பயணி ஒருவர் சனிக்கிழமை (18) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வருகை தரும் முனையத்தில் உள்ள கிரீன் செனல் வழியாக நுழைய முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய இளைஞர் எனவும், 10,000 மலேசிய பணத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்து, இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர முயன்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரில் கொக்கெய்ன் போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, துபாய்க்குப் பயணித்து, அங்கிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பொதியை சோதனையிட்ட போது, சொக்லேட் டோபிகள் இருந்த மூன்று கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 816 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21