வசீகரமான புன்னகைக்கு சொந்தக்காரரான நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகும் 'ஜி டி என்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகரும், இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜி டி என் - G D N' திரைப்படத்தில் ஆர். மாதவன், சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, டிஜே அருணாச்சலம், ஷீலா, கருணாகரன், அதிதி பாலன், கனிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன்- விஜய் மூலன் -ஆர். மாதவன் - சரிதா மாதவன்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் ஜூலை மாதம் 17ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய் நடிப்பில் தயாரான 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதால்.. போதிய படமாளிகை கிடைக்காத காரணத்தினால்... இத்திரைப்படத்தின் வெளியீடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதனிடையே ஆர். மாதவன் நடிப்பில் வெளியான 'ராக்கெட்டரி -நம்பி' படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் தயாராகும் 'ஜி டி என்' திரைப்படத்திற்கும் சர்வதேச அளவில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை திரை உலகத்திற்கான தனியார் இணையதளம் ஒன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM