'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' ஆகிய படங்களின் மூலம் முன்னணி நட்சத்திர இயக்குநராக உயர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'டி சி - D C- திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநராக பாரிய வெற்றியை பெற்ற லோகேஷ் கனகராஜ்- கதையின் நாயகனாகவும் வெற்றி பெறுவாரா? என்பதை தெரிந்து கொள்ள.. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.
வன்முறை ரீதியிலான படைப்பாளுமை கொண்ட அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டி சி தேவதாஸ் சந்திரா' திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா, கஸ்தூரிராஜா, அருண் மாதேஸ்வரன், அவினாஷ் ரகுதேவன் , ஜவஹர் சக்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம்... தற்போது ஓகஸ்ட் 7ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் டிகா 'பும்பா பும்பா டிகா டிகா..' எனும் புதிய பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் பாடல் மற்றும் காணொளி ஆகியவை வெளியாகி.. படத்தை பற்றிய எதிர்பார்ப்பை இணையவாசிகளிடம் ஏற்படுத்தி இருக்கிறது. ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் ஸ்கிரீன் மேஜிக் நிகழ்த்துவாரா? இல்லையா? என்பதை காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM