இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு போட்டித்தடையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவருக்கு எதிர்வரும் 6 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனுஷ்க குணதிலகவின் அண்டுக்கான ஒப்பந்த வருமானத்தின் 20 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டியின் போது ஒழுக்க விதிகளை மீறிய குற்றத்திற்காகவே போட்டித் தடையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.