நடிகர் லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

18 Jul, 2026 | 02:23 PM
image

தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் இளம் நடிகரான லியோ சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டெலிவரி பாய்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'செங்காத்தியே' எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெலிவரி பாய்' திரைப்படத்தில் லியோ சிவக்குமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த் ,உதயா தீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அசாஸி கிரியேஷன்ஸ் மற்றும் சாண்டி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'என்னம்மா நிக்கிறா சீனிக்காரி.. என்னமோ பண்ணுறா நெஞ்சில் ஏறி..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜா எழுத பின்னணி பாடகர் விஷ்ணு ராம் பாடியிருக்கிறார். இந்த பாடலில் கிராமிய பின்னணியிலான காட்சிகளும் நடனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பெருவாரியான டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47