(செ.சுபதர்ஷனி)
பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவின் 2026 ஆம் ஆண்டுக்கான அரையாண்டுப் பரிசோதனை மற்றும் விசேட கௌரவ அணிவகுப்புப் பரிசோதனை இன்று (18) சனிக்கிழமை காலை கோட்டை, குணசிங்கபுரவில் அமைந்துள்ள சொண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தனது 37 வருட காலப் பொலிஸ் சேவையை நிறைவு செய்து எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் ஓய்வுபெறவுள்ளார். அவர் ஓய்வுபெறுவதற்கு முன்னர் நடத்தப்படும் இறுதி கௌரவ அணிவகுப்புப் பரிசோதனை இது என்பதால், இது உத்தியோகபூர்வ விழாவாக இடம்பெற்றிருந்தது.
கடந்த 1988 ஆம் ஆண்டு ஒரு இளம் உப பொலிஸ் பரிசோதகராகப் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட மனோஜ் ரணகல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறம்படக் கடமையாற்றியுள்ளார். ஆரம்பத்தில் கடவத பொலிஸ் நிலையப் பணியாற்றிய அவர், யுத்த காலத்தில் வவுனியாவில் விசேட நடவடிக்கைகளிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றியதுடன், அதே ஆண்டில் மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் நாரஹேன்பிட்டிய மற்றும் முகத்துவாரம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரியாகவும் உயர் பதவிகளை வகித்தார்.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த உடன், பூநகரிப் பகுதிக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புதிய குடியேற்றங்களை மீளமைப்புச் செய்யும் விசேட மற்றும் சவாலான பொறுப்புக்களையும் அவர் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார்.
அதன் பின்னர் சிலாபம் தலைமையகப் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய போதே, அவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு பெற்றார். தொடர்ந்து கொழும்பு நகரின் மத்திய பிரிவுக்குப் பொறுப்பான (போக்குவரத்துப் பிரிவு ) அதிகாரியாகப் பணியாற்றினார்.
பதவியுயர்வுகளுடன் யாழ்ப்பாணப் வலய பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியாகவும், பின்னர் பொலிஸ் விளையாட்டுப் வலயப் பிரிவின் பணிப்பாளராகவும் அவர் கடமைகளை முன்னெடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளராக சுமார் 6 வருடங்கள் நீண்டகாலச் சேவையை ஆற்றியுள்ளார்.
தற்போது, ஒட்டுமொத்த இலங்கையினதும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைக் கண்காணிக்கும் பிரதான பணிப்பாளராக கடந்த மூன்று வருடங்களாக அவர் மிகச் சிறந்த முறையில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM