வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைசைக்கிள் மோதி பொலிஸ் சார்ஜன்ட் பலி!

18 Jul, 2026 | 10:00 AM
image

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட்  ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம்  நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50