(நெவில் அன்தனி)
பிரமாண்டமான ஆரம்ப விழாவுடன் எஸ்எஸ்சி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (17) தொடங்கிய 6ஆவது லங்கா பிறீமியர் லீக்கின் முதலாவது போட்டியில் நடப்பு உப சம்பியன் கோல் கெலன்ட்ஸ் அணியிடம் 36 ஓட்டங்களால் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் சரணடைந்தது.

இப் போட்டிக்கு முன்பதாக அரங்கேற்றப்பட்ட கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளும் 500 ட்ரோன்களின் வான்வெளி சாகசங்களும் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.





அத்துடன் கோல் கெலன்ட்ஸின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்தவுடன் நடத்தப்பட்ட கதிரியக்க காட்சிகள் மேலும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் கெலன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் சரித் அசலன்க 65 ஓட்டங்களையும் சாம் ஹாப்பர் 40 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 35 ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லிஸாட் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இதில் துனித் வெல்லாலகே 40 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 34 ஓட்டங்களையும் காமில் மிஷார 28 ஓட்டங்களையும் சமிந்து விக்ரமசிங்க 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

ந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆக்கிப் ஜாவேட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தசுன் ஷானக்க, சரித் அசலன்க, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சரித் அசலன்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM