டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அறிமுகமான பிறகு திரைத்துறையில் பல பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ரசிகர்களை வசீகரித்து வருகிறது. இந்தத் தருணத்தில் டிஜிட்டல் தொழில்துறையில் புதிதாக அறிமுகமாகி ஆக்கிரமிப்பு செய்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் 'அவிரா' என்ற பெயரில் முழு நீள திரைப்படம் உருவாகி வருகிறது.
விளம்பர பட இயக்குநரான பிரபாகரன் முதன் முதலாக போட்டோ ரியலிஸ்டிக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 'அவிரா' என்ற முழு நீள திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தை லைட் ஹவுஸ் ஃபிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கணேஷ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக இயக்குநர் பேசுகையில், ''அவிரா என்றால் பிரபஞ்சத்தின் பேரொளி என பொருள். புராண காலத்து கதையை பின்னினியாக கொண்டு கற்பனை கலந்த படைப்பாக 'அவிரா' தயாராகி இருக்கிறது': என்றார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கார்ட்டூன் திரைப்படங்கள்- கிறாபிக்ஸ் திரைப்படங்கள்- ஆகியவற்றை கடந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்கள் எதிர்காலத்தில் வெளியாகி... ரசிகர்களை வசப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM