அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

17 Jul, 2026 | 04:36 PM
image

தயாரிப்பு : மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் -  நியோ கேஸல் கிரியேஷன்ஸ்

நடிகர்கள் : பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன், செல் முருகன், இஸ்மத் பானு, நிகிலா ஷங்கர், 'பரிதாபங்கள்' கோபி, சுதர்சன் காந்தி மற்றும் பலர்

இயக்கம் : பாரி இளவழகன்

மதிப்பீடு : 2.5 /5

தமிழ் சினிமாவில் 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' என தொடர்ச்சியாக விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாரிய வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதாலும்... 'ஜமா' எனும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இயக்குநர் பாரி இளவழகனின் படைப்பு என்பதாலும்... இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நேர்த்தியாக புதிய விளம்பர உத்திகள் மூலம் சென்றடைய செய்ததாலும்.... படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை ஃபேமிலி என்டர்டெய்னர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதாலும்... இப்படத்தைக் காண ரசிகர்கள் பட மாளிகைக்கு சென்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கதையின் வலிமையே கதை களம் தான். அதாவது சென்னையில் உள்ள பெரம்பூர் எனும் பகுதியில் கடந்த தசாப்தங்களில் அதிகமாகவும்.. தற்போது அரிதாகவும் உள்ள ஆங்கிலோ இந்திய குடும்பங்கள்-  பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த குடும்பங்கள்- தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் - என கலவையான கலாச்சாரத்தை கொண்டிருக்கும் பகுதி. இந்த பகுதியில் அரசாங்க பணிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் தருணத்தில் அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு உடற்பயிற்சியாளராக பணியாற்றுகிறார் சிருமாமில்ல சீதா கிருஷ்ணா என்ற பெயரை சிஎஸ்கே என சுருக்கமாகக் கொண்ட நாயகனுக்கு... அப்பகுதியில் வசிக்கும் மேஜிக் @ மேஜிக் கோன்சால்வ்ஸ் எனும் ஆங்கிலோ இந்திய பெண்ணின் மீது காதல் வருகிறது. பாடசாலையில் பயிலும் காலத்திலேயே மேஜிக் மீது சிஎஸ்கே காதல் கொண்டிருந்தாலும்... அதனை வெளிப்படுத்தாமல் தயங்கிக் கொண்டிருக்கிறார். மேஜிக்கும்.. சிஎஸ்கே தன்னை காதலிப்பது தெரிந்தாலும் நட்பாகவே பழகுகிறார். ஒரு சூழலில் மேஜிக் , சிஎஸ்கேவின் காதலை ஏற்றுக் கொள்ள... சூழல் மற்றும் குழப்பம் காரணமாக அதனை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறார் சிஎஸ்கே. இதன் பிறகு அவர்களுடைய காதல் திருமணத்தில் இணைந்ததா? இல்லையா? என்பதை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.

முதல் பாதி திரைக்கதை எந்தவித சுவராசியமான திருப்பங்களும் இல்லாமல் இயல்பாகவே கடந்து செல்கிறது.

இரண்டாம் பாதி திரைக்கதையில் சில எதிர்பாராத திருப்பங்கள் இடம் பிடித்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சி செம ரகளை.

காதலை கவிதையாக சொல்வது-  அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்வது-  கலாச்சார வேறுபாடு-  தவறான புரிதல்-  ஆகிய விடயங்களை காட்டிலும்.. பாஸ்கர் - சரளா என்ற கதாபாத்திர வடிவமைப்பு- அதற்குரிய எழுத்து- திரை மொழி- ஆகியவை ரசிக்க வைக்கிறது.

ஆங்கிலோ இந்திய பெண்மணியாக கதையின் நாயகி கதாபாத்திரத்தை செதுக்கியிருப்பதும் தனி கவனம்  ஈர்க்கிறது. அதனை நடிகை ரம்யா ரங்கநாதன் நேர்த்தியாக திரையில் வெளிப்படுத்தி ரசிகர்களை வசீகரிக்கிறார். இவரை நேரில் பார்ப்பதை விட.. திரையில் அற்புதமான ஸ்கிரீன் மேஜிக் நிகழ்த்தி ரசிகர்களை வசப்படுத்துகிறார்.

சிஎஸ்கே எனும் சீதா கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாரி இளவழகன் அந்த கதாபாத்திரத்திற்காக அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நடித்து, தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறார். இவரது நடிப்பை விட இயக்கம் -பிரத்யேக அடையாளத்தை பதிவு செய்திருக்கிறது.

சரளா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஜா செல்வமணி- மீண்டும் திரையில் கம் பேக் கொடுத்து இருந்தாலும், பல இடங்களில் அனுபவமிக்க நடிப்பை நுட்பமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.

பெங்களூர் பாபா வேடத்தில் நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி சிரிப்பை வரவழைக்க ( உடல் மொழி- உச்சரிப்பு -உரையாடல்- ) கடுமையாக முயற்சி செய்து தோல்வியை சந்திக்கிறார்.

மங்கா பாபு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல் முருகனின் காட்சிகள் குறைவு என்றாலும்.. அவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு உத்திரவாதம்.

'நீ மாவு கடை வைக்க உன் ஜாதிக்காரன் உதவி பண்ணி இருக்கலாம். ஆனா உன்கிட்ட மாவு வாங்கினவன் எல்லாம் உன் ஜாதி காரனா?' என்ற உரையாடலுக்கு ரசிகர்களிடத்தில் கரவொலி எழுகிறது.

மற்றவர்களின் கலாச்சாரத்தை விமர்சிக்காமல், அதனை புரிந்து  கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என இயக்குநர்  வலியுறுத்தி இருப்பதை பாராட்டலாம்.

சென்னைவாசிகளுக்கே பெரம்பூரில் அழகை இவ்வளவு அழகியலுடன் காட்சிப்படுத்தியதற்காக ஒளிப்பதிவாளரைப் பாராட்டலாம்.

பாடல்களும், பின்னணி இசையும் பட மாளிகையில் படைப்பை காணும் உணர்வை சிதைக்கவில்லை.

அன்பே டயானா - லவ் கானா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47