ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை!

17 Jul, 2026 | 04:09 PM
image

இன்றைய சூழலில் எழுத்து, தட்டச்சு, இசைக்கருவியை இசைத்தல் ஆகியவற்றை தங்களது வாழ்வாதாரமாக கொண்டிருப்பவர்களுக்கு ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க கோளாறு பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் எழுதுவது... தட்டச்சு செய்வது... இசைக்கருவிகளை இசைப்பதில் தடுமாற்றம் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகளுக்கு தற்போது நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இலத்திரனியல் சாதனமான கைபேசியின் பாவனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வொய்ஸ் டைப்பிங் என்ற நவீன செயலி மூலம் கணினி மூலமாக தட்டச்சு செய்வது குறைந்திருந்தாலும்... ஆவண எழுத்தர்கள், எழுத்தாளர்கள்...தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு மேற்கொள்பவர்கள்... இசைக்கருவியை மீட்டுபவர்கள்.. ஆகியோர்களுக்கு விவரிக்க இயலாத நரம்பியல் இயக்க குறைபாட்டின் காரணமாக கை மற்றும் கை விரல்களில் பாதிப்பும், வலியும் ஏற்படும். சிலருக்கு கைகளை இயல்பாக இயக்க இயலாத நிலையும் ஏற்படும். இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் ரைட்டர்'ஸ் கிராம்ப் என்றும், ஃபோக்கல் டிஸ்டோனியா என்றும் குறிப்பிடுகிறார்கள் .

எம்முடைய மூளைப்பகுதியில் இருந்து தசைகளுக்கும், நரம்புகளுக்கும் இடையேயான தகவல் தொடர்பில் பாரிய குறைபாடு ஏற்படுவதால் இத்தகைய பாதிப்பு நிகழ்கிறது. இதனை வைத்தியர்கள் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய மருந்தியல் சிகிச்சையை வழங்குவர். இதற்கான நிவாரணம்.. சிலருக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு கிடைக்கக்கூடும். இத்தகைய தருணங்களில் தற்போது அறிமுகமாகி இருக்கும் போட்டோலினியம் டாக்ஸின் இஞ்செக்சன்ஸ் மற்றும் ட்ரான்ஸ்கிரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் ஆகிய நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தகைய நரம்பியல் இயக்க பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை முழுமையாக பின்பற்றினால்.. மீண்டும் இத்தகைய பாதிப்பு நிகழாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.

வைத்தியர் வேணி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெனிட்டோயூரினரி டியூபர்குளோசிஸ் எனும் சிறுநீரகத்தில் ஏற்படும்...

2026-08-18 16:54:32
news-image

கேஸ் கீஸர் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய...

2026-08-17 15:34:34
news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41