ஆடி மாதம் என்ன செய்யலாம்?

17 Jul, 2026 | 04:06 PM
image

எம்மில் பலருக்கும் ஆடி மாதம் பிறந்தால்... வணிக நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளில் ஷொப்பிங் செய்வது தான் மிகவும் பிடிக்கும். வேறு சிலருக்கு சுப காரியங்கள் நிகழாத மாதம் என்பதால், ஆடி வெள்ளி- ஆடி அமாவாசை ஆகிய நாட்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இறைவழிபாட்டை மேற்கொள்வார்கள். குறிப்பாக அம்மன் வழிபாட்டை கடைப்பிடிப்பார்கள். ஆனால் ஆடி மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமாக சில குறிப்புகளை பகிர்ந்துள்ளனர்.

ஆடி மாதம் என்பது சூரிய பகவான் கடக ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால் இங்கு குரு உச்சம் என்பதால் இந்த காலகட்டத்தில் அதாவது ஆடி மாதத்தில் பரிகாரங்களும், பிரார்த்தனைகளும் செய்தால்... அதற்கான பலன் பன்மடங்கு பெருகி, உங்களுக்கு நன்மையை வழங்கும். அதிலும் குறிப்பாக கடக ராசி- விருச்சிக ராசி- மீன ராசி- ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் இந்த ஆடி மாதம் முழுவதும் உங்களுக்கான பிரார்த்தனைகள்- பரிகாரங்கள் - தானங்கள் - தர்மங்கள் - செய்தால்... இந்த பிறவியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சுப பலன்கள் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும்.

என்ன செய்ய வேண்டும் என்றால்.. வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் கணபதி ஹோமம்' சிவன் பார்வதிக்கு திருக்கல்யாண உற்சவம் - சொர்ணதானம் - கோ தானம் - ஆகியவற்றை மேற்கொண்டால்... உங்களுக்கு சூட்சமமான தடைகள் ஏதேனும் இருந்தால், அவை அனைத்தும் உடைந்து சுப பலன்கள் கிட்டும். மேலும் குலதெய்வ வழிபாடும் ,அம்மன் வழிபாடும் மேற்கொள்ளும் போது தானங்களை செய்தால்... பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை தகர்க்கும் பிரத்யேக வழிமுறை..!

2026-08-18 16:38:10
news-image

பணத்தை சேமிக்கும் சுருக்கு பை சூட்சுமம்!

2026-08-17 15:20:29
news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31