ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திக்கு மத்தியில் எல்பிஎல் திட்டமிட்டபடி இன்று ஆரம்பமாகும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு

Published By: Digital Desk 3

17 Jul, 2026 | 03:31 PM
image

(என்.வீ.ஏ.)

விளையாட்டுத்துறை தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினால் ஜெவ்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான போதிலும், லங்கா பிரீமியர் லீக் 2026 திட்டமிட்டபடி இன்று மாலை கொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் ஆரம்பமாகும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் தொடர்பாக எழும் விசாரணைகள் தொடர்பாக ஏதேனும் உதவி கோரப்பட்டால், சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு லங்கா பிறீமியர் லீக் குழுவினருடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.

லங்கா பிறீமியர் லீக் 2026ஐ நடத்தும் பொறுப்புள்ள நிருவாக அமைப்பாக, போட்டியின் நேர்மைத்துவத்தைப் பாதுகாப்பதில் தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை  ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியது. அத்துடன் லீக்குடன் தொடர்புடைய எந்தவொரு பங்குதாரராலும் செய்யப்படும் ஊழல், முறைகேடு அல்லது முறைகேடுகளைத் சகித்துக்கொள்ளாது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

லங்கா பிறீமியர் லீக் போட்டியானது மிக உயர்ந்த நெறிமுறை மற்றும் நேர்மைத் தரங்களின் கீழ் நடத்தப்படுவதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ளது. லீக்கின் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்த அதன் ஊழல் எதிர்ப்புப் பிரிவு, சிறப்பு புலனாய்வுப் பிரிவுடன் (SIU) நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

மேலும், நியாயமான, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற சூழலை உறுதி செய்வதற்காக, போட்டி முழுவதும் சிறப்பு ஆதரவையும் கற்றலையும் வழங்குவதற்கு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு சுதந்திரமான விளையாட்டுத்துறை ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது.

ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளுக்கு எதிரான தனது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வலியுறுத்தியதுடன், எல்பிஎல் 2026 அத்தியாயம் மிகுந்த கண்ணியத்துடனும் நேர்மையுடனும் நடத்தப்படும் என்று ரசிகர்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உறுதியளிக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44