நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

17 Jul, 2026 | 02:58 PM
image

தமிழ் திரையுலகில் குறைந்த முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கான நம்பிக்கை நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் வைபவ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'மாறு வேஷம்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஸ்ரீனி இயக்கத்தில் உருவாகி வரும் 'மாறு வேஷம்' திரைப்படத்தில் வைபவ், வியானா, ராம்கி, முனிஸ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியம், இந்துமதி, மு. ராமசாமி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் எந்த திரைப்படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒனிரோமான்சி பிக்சர்ஸ்மற்றும் மங்கி மேன் கம்பனி ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''சவால் நிறைந்த வழக்குகளை புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரியான திலக் எனும் கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. புலனாய்வு விசாரணை டபார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் விவரிக்கப்பட்டிருப்பதால்... ரசிகர்களுக்கு வித்தியாசமான மற்றும் எதிர்பாராத திரை அனுபவம் கிடைக்கும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47