மனை­வியை வீட்டை விட்டு வெளியில் தள்ளி வீட்­டுற்குள் வரவிடாது தடை­வி­தித்த நபரை வீட­டிற்குள் செல்ல மாத்­தளை நீதிமன்றம் இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

மாத்­தளை இறத்­தோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த நப­ரொ­ரு­வ­ருக்கே இவ்­வாறு தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­ட்டுள்­ளது. 

இது குறித்து மேலும் தெரிய வரு­வ­தா­வது,

இறத்­தோட்டை  பொலிஸ் பிர­தே­சத்தில் வீடொன்றில் கணவன் மனை­வியின் தொலை­பே­சிக்கு வந்த தகவல் ஒன்றின் கார­ண­மாக சந்­தேகம் கொண்டு மனை­வியை தாக்கி துன்­பு­றுத்தி வீட்­டிற்குள் வர­வி­டாது வெளியில் தள்ளி கதவை  மூடிக்­கொண்­ட­துடன் ஜன்னல் கத­வு­களை திறக்க முடி­யா­த­வாறு ஆணி­களால் அடித்து மூடி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து மனைவி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து  பெண்கள் பாது­காப்பு பொலிஸார்  குறித்த நப­ருக்கு எதி­ராக மாத்­தளை நீதி­மன்றில் வழக்கு தொடர்ந்­தனர். 

நீதிவான் பி.எச்.எம்.சேத்­சிறி ஹேரத் விசா­ர­ணையை மேற்­கொண்­ட­துடன்  சந்­தேக நப­ரான கண­வ­ருக்கு  அவ்­வீட்­டிற்குள் செல்­லக்­கூ­டாது என இடைக்கால தடை­யுத்­த­ரவை பிறப்பித்ததுடன் குறித்த நபரை கடுமையாக எச்சரித்து விசாரணையை பிறிதொரு தினத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.