நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

Published By: Digital Desk 3

17 Jul, 2026 | 01:34 PM
image

நியூசிலாந்தில் முதன்முறையாக புலம்பெயராது அங்குள்ள காடுகளில் வாழும் உள்நாட்டுப் பறவை ஒன்றிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் முதல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே இந்த இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தின் வட தீவில் உள்ள வைராடப்பா பிராந்தியத்தில், உள்ளூர் மக்களால் 'காஹு' என்று அழைக்கப்படும் 'ஸ்வாம்ப் ஹாரியர் ஹாக்' வகை பருந்து ஒன்றுக்கே இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உயிரியல் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த பருந்துகள் பொதுவாக குளிர்காலத்தில் வேட்டையாடுவதற்காகக் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லக்கூடியவை. அங்கு ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிற பறவைகளை வேட்டையாடி உண்பதன் மூலமோ அல்லது அவற்றின் எச்சங்களை உண்பதன் மூலமோ இப்பருந்திற்குத் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடந்த புதன்கிழமை, வெலிங்டன் நகருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட 'பிரவுன் ஸ்குவா' என்ற புலம்பெயர் கடற்பறவை ஒன்றிற்கு நாட்டின் முதலாவது பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதுவரை நாட்டின் வணிக ரீதியிலான கோழிப்பண்ணைகளிலோ அல்லது வளர்ப்புப் பறவைகளிலோ இந்தத் தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், அண்டை நாடான அவுஸ்திரேலியாவிலும் முதன்முறையாக அதன் உள்ளூர் கடற்பறவை ஒன்றிற்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் அங்கு பதிவான வழக்குகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வந்த புலம்பெயர் பறவைகளுடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன.

உள்நாட்டுப் பறவைக்குத் தொற்று பரவியதை அடுத்து, நியூசிலாந்து சுகாதார மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

நாட்டின் மிக அரிய, அழிவின் விளிம்பிலுள்ள 5 முதன்மையான பறவை இனங்களைச் சேர்ந்த 300 முக்கிய இனப்பெருக்கப் பறவைகளுக்கு விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் நியூசிலாந்திற்கே உரித்தான, பறக்க முடியாத அரிய பறவை இனங்களான 'தாகாஹே'  மற்றும் 'காகாபோ'  கிளிகள் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08
news-image

இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில்...

2026-08-17 11:35:34
news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40