“முழு நாடுமே ஒன்றாக” நடவடிக்கை : 816 சந்தேக நபர்கள் கைது!

17 Jul, 2026 | 02:10 PM
image

(செ.சுபதர்ஷனி)

முழு நாடுமே ஒன்றாக என்ற நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய நேற்று வியாழக்கிழமை ( 16 ) மாத்திரம் 816 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாடு முழுவதும் சுமார் 818 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 816 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி நடவடிக்கைகமைய 567 கிராம் ஐஸ் போதைப்பொருள், 393 கிராம் ஹெரோயின், 413 கிராம் கஞ்சா மற்றும் 375 போதை மாத்திரைகள் ஆகியன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைதான நபர் ஒருவருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்குவிப்புத் தொடர்பழல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1 0 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 5 பேர் மறுவாழ்வு மத்தியநிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் அதிசொகுசு பேருந்து விபத்து: மோட்டார்...

2026-08-11 10:35:38
news-image

மின்னேரியா தேசிய பூங்காவில் துப்பாக்கியுடன் ஒருவர்...

2026-08-11 10:34:11
news-image

குடிவரவு திணைக்களத்தின் கணினி அமைப்பில் தொழில்நுட்பக்...

2026-08-11 09:44:02
news-image

ரிதீமாலியத்த வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் நிர்மாண...

2026-08-11 09:46:06
news-image

லக்கலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமனார்...

2026-08-11 09:28:18
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு!

2026-08-11 09:27:07
news-image

இன்றைய வானிலை

2026-08-11 06:15:18
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு நீதித்துறைக்கு மரண...

2026-08-11 06:13:40
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக பாடலி...

2026-08-11 06:10:23
news-image

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்...

2026-08-11 05:27:31
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது நாட்டுக்கு...

2026-08-10 14:02:40
news-image

அரசாங்கம் பொலிஸாரை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது...

2026-08-10 16:44:28