பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை ; குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 25 பேர் உட்பட 555 சந்தேகநபர்கள் கைது

17 Jul, 2026 | 01:04 PM
image

(செ.சுபதர்ஷனி)

பொலிஸ் மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 25 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 555 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியவகையில் வலய மட்டத்திலான பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, கடந்த 2026 ஜூலை 16 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 27,180 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் 555 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிறங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 139 சந்தேகநபர்கள் மற்றும் நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 268 நபர்களும் கைதுசெய்து செய்துப்பட்டுள்ளனர்.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 99 சாரதிகளும், ஆபத்தான முறையில் அலட்சியமாகவும், கவனயீனத்துடனும் வாகனம் செலுத்திய 123 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட் ட 4628 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்த விரைவில் புதிய...

2026-08-15 18:42:19
news-image

போதைப்பொருள் வழக்குகளில் 9,000 இரசாயன பகுப்பாய்வு...

2026-08-15 18:30:34
news-image

கடந்த 6 ஆண்டுகளில் சிறையிலிருந்து தப்பிய...

2026-08-15 15:50:46
news-image

மரண தண்டனைக்குத் தடை, பயங்கரவாதத் தடைச்...

2026-08-15 17:37:21
news-image

ஜனாதிபதியுடனான சந்திப்பின் முழு காணொளியையும் வெளியிடுக...

2026-08-15 18:35:26
news-image

22வது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு...

2026-08-15 18:00:56