இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது; ஒரு ஓட்டத்தால் சதத்தைத் தவறவிட்டார் ரூட்

17 Jul, 2026 | 12:24 PM
image

(நெவில் அன்தனி)

கார்டிவ் சொஃபியா கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என இங்கிலாந்து சமப்படுத்தியுள்ளது.

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் சிரேஷ்ட வீரர் ஜோ ரூட்டுக்கு சதம் அடிக்க ஒரு ஓட்டம் மாத்திரமே தெவைப்பட்டபோது கஸ் அட்கின்சன் அவருக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கொடுக்காதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இங்கிலாந்தின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது ரூட் 99 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

மறுமுனையில் அட்கின்சன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார்.

அவர் எதிர்கொண்ட முதலாவது பந்து வைட் என மத்தியஸ்தரால் அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து ரூட்டுக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கொடுக்காமல்  அட்கின்சன்  பவுண்டறி அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார்.

இதன் காரணமாக ரூட்டுக்கு சதத்தைப் பூர்த்திசெய்ய வாய்ப்பு கிடைக்காமல் போனது.அவர் முதலாவது போட்டியிலும் 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.

விராத் கோஹ்லி 2ஆவது விக்கெட்டில் ரோஹித் ஷர்மாவுடன் 60 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் ஷ்ரயேஸ் ஐயருடன் 67 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

விராத் கோஹ்லி (65), ஷ்ரயேஸ் ஐயர் (66) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைப் பெற்றனர்.

அவர்களை விட அணித் தலைவர் ஷுப்மான் கில் (31), ரோஹித் ஷர்மா (26), பின்வரிசை வீரர் ஜஸ்ப்ரிட் பும்ரா (20 ஆ.இ.) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சக்கிப் மஹ்மூத் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 44.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றீட்டியது.

ஜோ ரூட் 99 ஓட்டங்களுடனும் கஸ் அட்கின்சன் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்களைவிட வில் ஜெக்ஸ் 30 ஓட்டங்களையும் சாம் கரன் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் குர்னூர் ப்ரார் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: ஜோ ரூட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46