களனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அனத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் ஆகியோரை இன்று நண்பகலுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

மறு அறிவித்தல் வரும் வரை மாணவர்கள் எவரும் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதற்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.