(நெவில் அன்தனி)
லங்கா பிறீமியர் லீக்கின் ஆறாவது அத்தியாயம் இன்று (17) மாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் அணி ஒன்றின் உரிமையாளர் இலங்கை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய குற்றச் செயல்களை தடுக்கும் விதிகளின் கீழ் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின்பேரில் ஜெவ்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் மீதான விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையில் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், இலங்கையானது விளையாட்டு ஊழலுக்கு எதிராக உலகின் மிகக் கடுமையான சட்ட விதிகளைக் கொண்டுள்ளது. இந்த சட்ட விதிகள் போட்டி முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்தல், உடன் நிர்ணயம் மற்றும் விளையாட்டில் நிகழும் பிற முறைகேடுகளைக் குற்றமாக்குகின்றன.
இந்தக் குற்றச் செயல்கள் சட்ட விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதும் குற்றவாளிகள் கணிசமான அபராதங்களையும் சிறைத் தண்டனைகளையும் எதிர்கொள்கின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM