கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல் வன்புணர்வு புரிந்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Published By: Vishnu

16 Jul, 2026 | 09:52 PM
image

கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

14 வயது நிரம்பிய சிறுமிக்கு எதிராக குறித்த செயலானது வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் 2013, 2014 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையினை பொலிசார் கைது செய்து பி அறிக்கையின் மூலம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கம் செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்ச்சியாக விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, குறித்த வழக்கானது வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக வியாழக்கிழமை (16.07) திகதியிடப்பட்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, குறித்த 47 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக 4 பாலியல் வன்புணர்வு குற்றச் சாட்டுக்கள் அரச சட்டவாதியால் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மன்று, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 4 குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில் 45 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன், நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரூபாய் 3 இலட்சம் வீதம் 12 இலட்சம் ரூபாய் சிறுமிக்கு நஸ்ட ஈட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் நீதிமன்றத்திற்கு அபாரம் செலுத்த வேண்டும் எனவும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்தார். குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக அரச சட்டலாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிரந்தார்.

குறித்த பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க வேண்டிய அவரின் இயற்கை பாதுகாவலராகிய தந்தையே குறித்த குற்றச்சாட்டினை புரிந்துள்ளமை காரணமாக குறித்த எதிரிக்கு எதிராக எவ்வித கருனையும் காட்டாது அதிகபட்ச தண்டனை விதித்துள்ளதாக நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பின் போது சுட்டிக்காட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்...

2026-08-19 13:33:52
news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24