பேஸ்புக் நட்பில் அறி­மு­க­மான யுவதி ஒரு­வரின் நிர்­வாணப் படங்­களை பெற்று அதனை பிரி­தொ­ரு­வ­ரிடம் ஒரு இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்த குற்­றச்­சாட்டில் மட்­டக்­க­ளப்பை சேர்ந்த சந்­தேக நப­ரொ­ரு­வரை வெள்­ள­வத்தை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­நபர் கல்­கிஸை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­த­னை­ய­டுத்து கல்­கிஸை பிர­தம நீதிவான் மற்றும் மேல­திக மாவட்ட நீதி­பதி அவரை எதிர்­வரும் ஒக்­டோபர் 6 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி பேஸ்­புக்­கி­னூ­டாக சந்­தே­க­ந­பரை அறிந்­து­கொண்ட  ஹம்­பாந்­தோட்­டையை சேர்ந்­த­வரும், தற்­போது வெள்­ள­வத்­தையை வசிப்­பி­ட­மாக கொண்­ட­வ­ரு­மான பெண்­ணொ­ருவர் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளுக்­க­மைய சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

பேஸ்­புக்­கி­னூ­டாக சந்­தே­க­நபர் தனக்கு அறி­மு­க­மா­ன­தா­கவும் காலப்­போக்கில் தமது நட்பு காத­லாக மாறி­ய­தா­கவும் முறைப்­பாட்­டா­ள­ரான பெண் தெரி­வித்­துள்ளார். 

அத்­துடன் தனது மனைவி சிங்­கப்­பூரில் தொழி­லுக்கு சென்று உயி­ரி­ழந்­த­தா­கவும் சந்­தே­க­நபர் அப்­பெண்­ணிடம் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், சந்­தே­க­நபர் தனது காத­லியின் மூல­மாக அவ­ரது நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை மின்­னஞ்சம் மூல­மாக பெற்று சில நாட்­களின் பின்னர் சந்­தே­க­நபர் அப்­பெண்­ணு­ட­னான காதல் தொடர்பை துண்­டித்­துள்ளார்.

தன்­னு­ட­னான தொடர்பை திடீ­ரென துண்­டித்­த­மைக்­கான கார­ணத்தை ஆராய்ந்த போது தன்­னி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட நிர்­வாணப் படத்தை சந்­தேக நபர் பிரி­தொ­ரு­வ­ருக்கு ஒரு இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­துள்­ளமை தெரி­ய­வந்­த­தாக அப்பெண் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.