கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை - இந்தியா டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு

Published By: Vishnu

16 Jul, 2026 | 08:31 PM
image

(நெவில் அன்தனி)

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது நான்கு நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (16) மாலை வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் இரண்டு அணிகளுகம் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தன.

இலங்கையின் முதல் இன்னிங்ஸில் சேனுஜ வேக்குனாகொடவும் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் லக்ஷியா ராய்சாந்தனியும் இரட்டைச் சதங்கள் குவித்து அசத்தினர்.

அத்துடன் இந்தியா சார்பாக சாகர் விர்க், மானவ் கிரிஷ்ணா ஆகியோர் சதங்கள் பெற்று தமது அணியை மேலும் பலப்படுத்தினர்.

முதல் இன்னிங்ஸில் நிறைவில் 152 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்துக்கு மத்தியில் 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அத்துடன் போட்டியும் முடிவுக்கு வந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

19 வயதுக்குட்பட்ட இலங்கை 1ஆவது இன்: 424 - 9 விக். (சேனுஜ வேக்குனாகொட 233, விமத் தின்சார 52, கவிஜ கமகே 49, சாமிக்க ஹீனட்டிகல 45, ஜெகநாதன் ஹேம்சுதேஷன் 107 - 3 விக்.)

19 வயதுக்குட்பட்ட இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 576 (லக்ஷியா ராய்சாந்தனி 207, சாகர் விர்க் 134, மானவ் கிரிஷ்ணா 100, குஷ் பட்டேல் 42, லதேண்ந்ரா ஆகாஷ் 66 - 3 விக்., கவிஜ கமகே 117 - 2 விக்., திமத் அபேசிங்க 142 - 2 விக்.)

19 வயதுக்குட்பட்ட இலங்கை 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 178 - 6 விக். (துல்னித் சிகேரா 72, கவிஜ கமகே 51, யாஷ்பர்தன் சவ்ஹான் 48 - 4 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46