இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்

Published By: Vishnu

16 Jul, 2026 | 07:37 PM
image

தனது பதவிக்காலத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய நெருக்கமான ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி  தெரிவித்த  தூதுவர் அல்-கஹ்தானி, எதிர்காலத்திலும் இலங்கைக்குச் சவூதி அரேபிய இராச்சியம் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர், காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி  தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறும் முகமாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வியாழக்கிழமை (16) அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது, தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவையும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நிலவிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார்.

அத்தோடு, 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு வழங்கப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகளுக்காகச் சவூதி அரேபிய இராச்சியத்தின் அரசாங்கத்திற்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். சவூதி அரசாங்கத்தின் நிதி அனுசரணையிலான செயற்திட்டங்களின் ஊடாக, இலங்கையின் கல்வித்துறைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தனது பதவிக்காலத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய நெருக்கமான ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் தூதுவர் அல்-கஹ்தானி நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்குச் சவூதி அரேபிய இராச்சியம் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன்களுக்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் பிரதித் தூதுவர் யாசிர் அல்ஹாசிமி, தூதுவரின் செயலாளர்  ஏ.சி.ஏ. மஸாஹிர்  பிரதமரின் செயலாளர்  பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர்  சாகரிகா போகாஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58