குறைந்த பராமரிப்புக் கட்டணம் மற்றும் நெகிழ்வான கொடுப்பனவுத் திட்டங்கள்
சூழலுக்கு இசைந்த வாழ்வுக்கு திருப்புமுனையாக மாறியுள்ளது
உண்மையான கருத்துக்களின் அடிப்படையில் கட்டப்பட்ட, மனிதரை மையமாகக் கொண்ட, அனைத்து வசதிகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முன்னுரிமை அளிக்கும் வாழ்க்கை வசதி
முன்னணி பிரத்தியேக வகை ஆதன நிர்மாண நிறுவனமான Excello Developers, தெஹிவளையில் அனைத்து வசதிகளையும் எளிதில் பெற்றுக்கொள்ளக்கூடிய இடமாகக் காணப்படும் கேரன் பிளேஸில் (Carron Place) அமைந்துள்ள தனது புதிய குடியிருப்புத் திட்டமான Aathavan by Excello-ஐ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
ரூபா 38 மில்லியனில் இருந்து தொடங்கும் விலையில் கிடைக்கும், சூழலுக்கு இசைவாக்கமும், சூழல் நேயமும் கொண்ட நிர்மாணம், அழகியல் சிறப்பையும் நீண்ட கால முதலீட்டு மதிப்பையும் சமநிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட முன்னணி அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டு, நகர்ப்புற ஆடம்பரத்தில் புதிய தராதரமொன்றை அறிமுகப்படுத்துகிறது.

“Excello நிறுவனத்தைப் பொறுத்தவரை, ‘வாழ்வை மேம்படுத்தல்’ என்பதே எமது வடிவமைப்பின் அடிப்படைத் தத்துவமாக உள்ளது. அதாவது ஆடம்பரமான தோற்றத்தை விடவும் அதன் சிறப்பு மேலானது" என்று Excello Developers நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுபாஷ் தவராஜசிங்கம் கூறினார்.
“Aathavan by Excello செயற்திட்டத்திற்காக, அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாழ்விடங்களை உருவாக்குவதற்காக, நாங்கள் பல மாதங்களாக சாதாரண மக்களுடன் கலந்துரையாடினோம். முழுமையாக சூரிய எரிசக்தியில் இயங்கும் கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் சுற்றுச்சூழலுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அதிக பராமரிப்புக் கட்டணங்கள் மற்றும் சந்தையின் ஏற்றத்தாழ்வுகளிலிருந்தும் எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கிறோம். வங்கிகளுடன் நாம் கொண்டுள்ள விசேட கூட்டாண்மைகள் மற்றும் நெகிழ்வான கொடுப்பனவுத் தெரிவுகளுடன் இணைந்து, இந்தச் செயற்திட்டமானது பொறுப்புணர்வுமிக்க, மனிதரை மையமாகக் கொண்ட சூழல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நீண்ட கால சொத்து மதிப்பை உறுதிமொழியளித்தவாறு உரிய நேரத்தில் மற்றும் திட்டமிடப்பட்ட செலவுக்குள் வழங்குவதை உறுதி செய்கிறது.”

Aathavan by Excello செயற்திட்டமானது எட்டு மாடிகள் கொண்டதாக வானளாவில் எழுந்து நிற்கின்றது. இது, ஆதனத்தின் ஒவ்வொரு சதுர அடியிலும் உச்சப்பயனை உறுதிசெய்யும் வகையில், பல்வகை வசதிகளுக்கான உள்ளமைவுகளில் வடிவமைக்கப்பட்ட 44 பிரத்தியேக அடுக்குமனைகளைக் கொண்டுள்ளது. இந்த தளவமைப்புகள் பல்வேறு வாழ்க்கை முறைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. 1,020 சதுர அடியில் உச்ச வடிவமைப்புக் கொண்ட இரண்டு படுக்கையறை குடியிருப்புகளையும், 1,380 சதுர அடியில் விசாலமான மூன்று படுக்கையறை குடியிருப்புகளையும் அவை வழங்குகின்றன. மக்களை நேர்காணல் செய்வதற்கும் ஆழமான சந்தை ஆராய்ச்சியை நடத்துவதற்கும் அதிக நேரத்தை ஒதுக்கியுள்ள Excello, திட்டமிடலில் ஒரு அடிமட்ட அணுகுமுறையைக் கையாண்டது. இந்த செயல்முறை, ஒவ்வொரு தளவமைப்பும் பயன்பாடும் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் நேரடியாக உருவாக்கப்படுவதை உறுதி செய்தது. இதன் விளைவாக, உடல்நலம் குன்றிய அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, படுக்கை மின்தூக்கியாகவும் செயல்படும் மின்தூக்கி போன்ற முக்கியமான அன்றாட தேவைப்பாடுகள் சேர்க்கப்பட்டன. இது, வயதான குடும்ப உறுப்பினர்களைக் கையாளும் எவருக்கும் ஒரு விலைமதிப்பற்ற அம்சமாகும்.
மிகவும் உன்னிப்பான சுற்றுச்சூழல் நிலைபேற்றியலின் அத்திவாரத்துடன் நிர்மாணிக்கப்படுகின்ற இந்தத் திட்டம், அதன் குடியிருப்பாளர்களுக்கான நீண்ட கால செயல்பாட்டுச் செலவுகளை நேரடியாகக் குறைக்கும் வகையில் சூழல்நேய புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த அடுக்குமாடித் தொகுதி முழுவதுமாக சூரிய எரிசக்தியில் இயங்குகிறது, இது வீட்டு உரிமையாளர்களை அதிகரித்து வரும் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணங்களிலிருந்து பாதுகாக்கிறது. மாதாந்த பராமரிப்புக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், அடுக்குமாடித் தொகுதியில் உள்ள நீர் மீள்சுழற்சி அமைப்பு, இங்குள்ள வாகனங்கள் கழுவும் இடங்களுக்கும் தோட்டப் பகுதிகளுக்கும் நீரை திறன்மிக்க வழியில் வழங்குகிறது. மொட்டை மாடிப் பகுதியானது, குடியிருப்பாளர்களுக்காக பிரத்தியேக நடைப்பயிற்சி மற்றும் மெதுவோட்டப் பாதைகளையும், ஒட்டுமொத்த வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்தையும் கொண்டு, ஒரு சமூக மையமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு கட்டடக்கலை முதல் கட்டுமானப் பொறியியல் வரை அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கையாளும் ஒரு முழுமையான ஒருங்கிணைந்த கட்டமைப்பின் மூலம், இலங்கையின் போட்டி நிறைந்த கட்டுமானத் துறையில் Excello Developers தொடர்ந்தும் தனித்துவத்துடன் தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. முழுமையான மன அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு Excello நேரடியாக அந்த அடுக்குமாடித் தொகுதியை நிர்வகிக்கும். இது குறைபாடற்ற பராமரிப்பையும், தங்குதடையற்ற சமூக செயல்பாடுகளையும் உறுதி செய்யும். மேலும், கட்டுமான செயல்முறை முழுவதும் முழுமையான நிதி கையாள்கை வெளிப்படைத்தன்மை, காலக்கெடுவை கண்டிப்பாகப் பின்பற்றுதல் மற்றும் தரவு அடிப்படையிலான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக, இந்நிறுவனம் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த செயற்திட்ட முகாமைத்துவக் கருவிகளையும் பயன்படுத்துகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆதனத்தை எளிதில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுவதற்காக, வங்கிகளுடன் விசேட கூட்டாண்மைகளை ஏற்படுத்தியுள்ள Excello Developers, நவீன வீட்டுக் கொள்வனவாளர்களின் பல்வேறு நிதித் தெரிவுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான, கட்டமைக்கப்பட்ட கொடுப்பனவுத் திட்டங்களையும் கொண்டுள்ளது.

Excello Developers நிறுவனம் தொடர்பான விபரங்கள்
இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு ஆதன நிர்மாண நிறுவனமான Excello Developers, கட்டடக்கலை நேர்த்தி, செயல்பாடு மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மிகுந்த சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் கலப்புப் பயன்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்நிறுவனம், இலங்கையில் உள்ள வீட்டு உரிமையாளர்களின் மாறிவரும் வாழ்க்கை முறைத் தேவைகளைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்தும் சமகால வாழ்விடங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் விவரங்களுக்கு, அவர்களின் இணையத்தளமான www.excello.lk-ஐப் பார்வையிடவும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM