கொழும்பில் பொழுதுபோக்கு வரி குறைப்பு : மாநகர சபை புதிய வர்த்தமானி வெளியீடு!

16 Jul, 2026 | 05:42 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவாக, பொழுதுபோக்கு வரிகளை கொழும்பு மாநகர சபை குறைத்துள்ளதுடன், இதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய வரி திருத்தங்கள், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. 

இன்று (16) கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெய்லி பல்தசார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பதவியேற்றபோது, கொழும்பு மக்களுக்கு பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ரசிப்பதற்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குமாறு ஆளுநர் எங்களைக் கேட்டுக்கொண்டார். அதனை மனதில் வைத்து, மக்களுக்கு அதனை எவ்வாறு எளிதாக்கலாம் என்று ஒரு சபையாக ஆராய்ந்து, வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் பொழுதுபோக்கு வரியை 5 சதவீதத்தால் குறைப்பதற்கு அனுமதி வழங்கினோம். தற்போது அந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியும் வெளியாகியுள்ளது.

இந்த புதிய வரி விகிதங்கள் அனைத்து பொழுதுபோக்கு வரி பிரிவுகளுக்கும் பொருந்தும். பொதுமக்கள் இந்த நிகழ்வுகளை தடையின்றி ரசிப்பதற்கும், இலங்கையின் படைப்பாற்றல் துறைக்கு பக்கபலமாக இருப்பதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் இசை நிகழ்ச்சிகளுக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த 12 சதவீத பொழுதுபோக்கு வரியை 7 சதவீதமாகக் குறைத்துள்ளோம். இந்த வரிக்குறைப்பின் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சலுகை கிடைக்கிறது. எனவே, அந்த சலுகையைக் கருத்திற்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நுழைவுச்சீட்டு விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நிகழ்வுகளை அதிகளவிலான மக்கள் பங்குபெறுவதற்கு ஏற்ப மலிவாக்க முடியும்.

கலைத்துறை வளர்ச்சியடைவதுடன், சாதாரண பொதுமக்கள் தங்களுக்கு மலிவான விலையில் தரமான பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க வேண்டும் என்பதே எமது முதன்மையான எதிர்பார்ப்பாகும். ஒரு நகரம் என்பது வெறும் சாலைகளினாலும் கட்டடங்களினாலும் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. இசை, நாடகம், விளையாட்டு மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் கூட்டுப் பகிர்வுகளின் மூலமுமே அது கட்டமைக்கப்படுகிறது. 

கொழும்பு நகரம், மக்கள் இந்த அனைத்து அம்சங்களையும் இன்னும் அதிகமாக இரசிக்கக்கூடிய ஒரு இடமாக மாறுவதற்கு இந்த நடவடிக்கை ஒரு ஆரம்பப்படியாக அமையும் என மேயர் விராய் கெய்லி பல்தசார் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02