சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய நட்சத்திர முகமான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஃபௌஜி' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபௌஜி' திரைப்படத்தில் பிரபாஸ், இமான்வி , அனுபம் கெர் , மிதுன் சக்கரவர்த்தி, பானுச்சந்தர், சைத்ரா ஜே. ஆச்சார் , ஜெயபிரதா, ராகுல் ரவீந்திரன், ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். பீரியாடிக் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் சார்பில் பூஷன் குமார் வழங்குகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை இப்படத்தின் நாயகன் பிரபாஸ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பிரம்மாண்டமான போஸ்டருடன் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனால் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM