இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் குறுகிய காலத்தில் பெரும் செல்வங்களை சேர்த்திட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது. குறைவான உழைப்பிலோ அல்லது புத்திசாலித்தனமான உழைப்பிலோ கோடிக்கணக்கான ரூபாயை லாபமாக ஈட்ட வேண்டும் என்பதும், இதற்கான வழிமுறைகளை தேடுவதும் தான் இன்றைய இளம் தலைமுறை நிதி சார்ந்த அணுகுமுறையாக இருக்கிறது.
பொதுவாகவே செல்வந்தராகவோ தனவந்தராகவோ ஒரு வார வேண்டும் என்றால் உருவாக வேண்டும் என்றால்... அதற்கு ஒவ்வொருவரின் கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் இணைந்து இருக்க வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
திறமை இருந்தாலும் வாய்ப்பு இருந்தாலும் தனித்துவமான அணுகுமுறை இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்றால் செல்வந்தராக முடியாது. இந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்கு ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கி உள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : குடை- காலணி- கம்பளி ஆடை
கருப்பு வண்ணத்திலான குடை- எட்டு என்ற அளவிலான கருப்பு வண்ண காலணி- கருப்பு வண்ண கம்பளி ஆடை- ஆகியவற்றை வாங்கி விட வேண்டும். இவற்றை சனிக்கிழமைகளில் சனி ஓரை தருணத்தில் உங்களுக்கு அறிமுகமற்ற ஏழை- முதியவர் - ஆதரவற்றவர் - மாற்றுத்திறனாளி- ஆகியோர்களில் ஒருவரை தெரிவு செய்து அவர்களுக்கு தானமாக வழங்கிட வேண்டும்.
இந்த தானத்தை தொடர்ந்து எட்டு வார சனிக்கிழமைகளில் வழங்கி வந்தால் அதன் பிறகு உங்களிடம் செல்வம் சேர தொடங்கும். இவை குறுகிய காலத்திற்குள் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்து உங்களது நோக்கமான தனவந்தராக வேண்டும் என்ற இலக்கை எளிதாக எட்டலாம்.
இந்த பொருட்களை தானமாக வழங்கிய பிறகு உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஒவ்வொன்றும் சாதகமாக அமைந்து பொருள் சேர்க்கை உயரத் தொடங்கும். இதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM