சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை' படத்தின் தொடக்க விழா

16 Jul, 2026 | 05:13 PM
image

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இளைய வாரிசான சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'வாணவேடிக்கை' என பெயரிடப்பட்டு,  அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜய் காந்த்,  'பருத்திவீரன்' சரவணன், இயக்குநர் தமிழ், தயாரிப்பாளர் டி சிவா, கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அர்வி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இந்திய மாநிலங்களவை உறுப்பினரான எல். கே. சுதீஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழாவில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் - இயக்குநர்கள் சுசீந்திரன் - ராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பை திருமதி பிரேமலதா விஜய்காந்த் & திருமதி பூர்ண ஜோதி சுதீஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தந்தைக்கும், மகனுக்குமான உணர்வை சொல்லும் கொமர்சல் திரைப்படமாக  இப்படம் உருவாகிறது. இதுவரை திரையில் பார்த்திராத சண்முக பாண்டியனை காணலாம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47