நடிகரும், இயக்குநருமான ஜே.டி. சக்கரவர்த்தி கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எனிமி ஆப் தி ஸ்மக்ளர்' திரைப்படம் - ஒரு நாட்டின் பொருளாதார பாதுகாப்பிற்கு அடித்தளமாக திகழும் சுங்கத்துறை -அமலாக்கத்துறை - மறைமுக வரி விதிப்பு துறை - ஆகியவற்றின் விசாரணையை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் தோ. சமயமுரளி இயக்கத்தில் உருவாகி வரும் 'எனிமி ஆப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தில் ஜே. டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேகா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் டேனியல் மற்றும் தோ .சமயமுரளி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். பொருளாதார குற்ற வழக்கு தொடர்பான புலன் விசாரணை பாணியில் அமைந்திருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராம் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' சென்னையில் குடிசை பகுதியில் வாழும் இரண்டு இளைஞர்கள், நிழல் உலக தாதா மூலமாக குஜராத் துறைமுகத்திலிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருளை கடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.
இதனை சுங்கத்துறை அதிகாரியான முரளி கிருஷ்ணா தடுப்பதற்காக களமிறங்குகிறார். லஞ்சமும், வஞ்சமும் நிறைந்த இந்த ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்ளும் அந்த இரண்டு இளைஞர்களின் பயணமே இப்படத்தின் கதை'' என்றார்.
இதனிடையே இயக்குநர் தோ. சமயமுரளி இந்திய வருவாய் துறை பணியில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதும் இத்துறையில் பணியாற்றிய போது சர்வதேச விருதுகளை பெற்றவர் என்பதும் இவர் எழுத்தாளர்- ஆய்வாளர்- இசையமைப்பாளர்- நடிகர்- இயக்குநர் - என பன்முக ஆளுமை திறன் படைத்தவர் என்பதும் அவருடைய எழுத்தில் வெளியான 'எனிமி ஆப் தி ஸ்மக்ளர் ' எனும் நூலை தழுவி இப்படம் தயாராகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM