பெண் ஒரு­வ­ரு­ட­னான கள்ளத் தொடர்பு கார­ண­மாக, கர்ப்­பி­ணி­யான தனது காதல் மனை­வியை கழுத்­த­றுத்துக் கொலை செய்த கணவன் உட்­பட மூவ­ருக்கு கேகாலை மேல்­நீ­தி­மன்றம் நேற்­று­முன்­தினம் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

இச் சம்பவம் கடந்த 1999 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

பாதுக்க, மாவத்­த­கம பிர­தே­சங்­களைச் சேர்ந்த கமகே சந்­தி­ர­கு­மார, ரெங்கன் கோவிந்­த­சாமி எனப்­படும் ராஜா, மாரி­முத்து ரமேஷ் கண்ணா ஆகி­யோ­ருக்கே இவ்­வாறு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

முத­லா­வது குற்­ற­வா­ளி­யான கமகே சந்­தி­ர­கு­மார  4 வரு­ட­மாக காத­லித்த  பின்னர் பாதுக்­கவை சேர்ந்த மோனிகா ரசிகா குமாரி (21) என்ற பெண்ணை 

திரு­மணம் செய்து அவி­சா­வ­ளைக்கு வந்­துள்­ளனர். அதன்­பின்னர் மனைவி கர்ப்­ப­ம­டைந்­தி­ருந்த வேளையில் குற்­ற­வா­ளி­யான சந்­தி­ர­கு­மார அவி­சா­வளை நகரில் தையல் நிலையம் ஒன்றில்  பணி­யாற்றி வந்­தி­ருந்த நிலையில் அவி­சா­வளை கைத்­தொழிற் பேட்­டையில் பணி­யாற்­றிய வந்த யுவதி ஒரு­வ­ருடன் காதல் தொடர்பை பேணி­வந்­துள்ளார்.

இந்­நி­லையில், தனது கள்ளக் காத­லியை திரு­மணம் செய்­து­கொள்­வ­தற்­காக முதல் மனை­வியை கொலை செய்­வ­தற்கு திட்டம் தீட்­டிய சந்­தி­ர­கு­மார, எசல பெர­ஹரா உற்­சவம் பார்ப்­ப­தற்­காக அழைத்து செல்­வ­தாக கூறி தனது நண்­பர்கள் இரு­வ­ருடன் கர்ப்­பி­ணி­யான தனது மனை­வியை அழைத்­துக்­கொண்டு தெர­ணி­ய­கல வீதியில் பஸ்ஸில் பய­ணித்­துள்ளார்.

 வர­கா­தென்ன பிர­தே­சத்தில் பஸ்­ஸி­லி­ருந்து இறங்கி தனது நண்­பர்கள் இரு­வ­ருடன் இணைந்து கர்ப்­பிணி மனை­வியை இறப்பர் தோட்­ட­மொன்­றுக்குள் அழைத்துச் சென்று அச்­சு­றுத்­திய சந்­தி­ர­கு­மார அவ­ரது நகை­களை அப­க­ரித்­த­துடன் நண்­பர்­களின் உத­வி­யுடன் அவரை கழுத்­த­றுத்து கொலை செய்து மூவ­ரு­மாக தப்பிச் சென்­றுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, கர்ப்­பிணிப் பெண்ணின் சட­லத்‍தை கண்டு குறித்த இறப்பர் தோட்­டத்­துக்கு அருகில் வசித்­து­வந்த பெண்­ணொ­ருவர் தெர­ணி­ய­கல பொலி­ஸா­ருக்கு அறி­வித்­தி­ருந்த நிலையில் சந்­தே­கத்தின் பெயரில் உயி­ரி­ழந்த பெண்ணின் கணவர் கைது செய்­யப்­பட்டார்.

முதலில் தனது மனைவி சில தினங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன­தாக சந்­தே­க­நபர் தெரி­வித்­துள்ள நிலையில் சம்­பவ இடத்­துக்கு சென்று சட­லத்தை அடை­யாளம் காட்­டி­யி­ருந்தார். சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஏனைய குற்­ற­வா­ளிகள் தற்­போ­து­வரை தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தனது மனை­வியை கொலை செய்­வ­தற்கு கூலி­யாக பிர­தான குற்­ற­வாளி தனது நண்­பர்கள் இரு­வ­ருக்கும் மது­பா­னமும் தலா 500 ரூபா பணமும் வழங்­கி­யுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.  

இந்­நி­லையில், சந்­தே­க­ந­பர்கள் மூவ­ருக்கும் எதி­ரான குற்றம் சந்­தே­கத்­துக்­கி­ட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து கேகாலை மேல் நீதி­மன்ற நீதி­பதி தம்­மிக்க கணே­பொல அவர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக கருதி மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்தார்.

அத்­துடன் கர்ப்­பிணிப் பெண்ணின் நகை­களை கொள்­ளை­யிட்ட குற்­றத்­துக்­காக தலா 5000 ரூபா அப­ரா­தத்­துடன் தலா 3 வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டது. அப­ராதம் செலுத்­தா­விடின் மேலும் 3 மாத  சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க வேண்டும் எனவும் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. மேலும் தமை­றை­வா­கி­யுள்ள ஏனைய சந்­தே­க­ந­பர்கள் இரு­வ­ரையும் கைது செய்து தண்­ட­னை­ய­ளிக்க நீதி­மன்றம் ­களை கொள்­ளை­யிட்ட குற்­றத்­துக்­காக தலா 5000 ரூபா அபராதத்துடன் தலா 3 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தாவிடின் மேலும் 3 மாத  சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் தமைறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து தண்டனையளிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.