தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் நடிப்பில் உருவான கடைசி தமிழ் திரைப்படம் 'ஜனநாயகன்' படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே , பொபி தியோல், மமீதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியா மணி, நரேன், நாசர் , சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மாஸான கொமர்சல் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியன்று பொங்கல் விடுமுறை நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பட மாளிகையில் திரைப்படத்தை வெளியிடுவதற்கான சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் காரணமாக திரைப்படம் திட்டமிட்ட திகதியில் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு கடந்த வாரம் இந்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சான்றிதழ் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து இத்திரைப்படம் எதிர் வரும் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ்- தெலுங்கு -மலையாளம்- கன்னடம்- இந்தி- உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்களும் தமிழாக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM