நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி டி என்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

16 Jul, 2026 | 05:02 PM
image

இந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பு திறன் கொண்ட நட்சத்திர நடிகராக வலம் வரும் ஆர். மாதவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜி டி என்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மனச பறிச்சாயே..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான கிருஷ்ண குமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஜி டி என்' திரைப்படத்தில் ஆர். மாதவன், சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, ஷீலா , கருணாகரன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். தமிழகத்தில் பிறந்து உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் வாழ்க்கை வரலாறைத் தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரை கலர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 17 ஆம் திகதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இத்திரை திரைப்படம் சில திரையுலக காரணங்களால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'மனச பறிச்சாயே..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் உமாதேவி எழுத பின்னணி பாடகர் சத்யபிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சஞ்சனா கல்மாஞ்சி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலில் இடம் பிடித்திருக்கும் பாடல் வரிகளும் மெட்டும் மெல்லிசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47