விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின் 'ஜுமாக்கா' படத்தின் பர்ஸ்ட் லுக்

16 Jul, 2026 | 04:59 PM
image

இயக்குநரும், நிகரற்ற குணச்சித்திர நடிகருமான பாலாஜி சக்திவேல் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஜுமாக்கா' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜுமாக்கா' திரைப்படத்தில் பாலாஜி சக்திவேல், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைத்திருக்கிறார்.

பேண்டஸி வித் கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பின் தயாரிப்பாளர்கள் ஜெயக்குமார் - பிரீத்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது .

இதில் கதையின் நாயகனான பாலாஜி சக்திவேல் கையில் கடந்த தசாப்தத்தை சார்ந்த புகைப்பட கருவி இருப்பதும் அதனைச் சுற்றி கதை மாந்தர்கள் வித்தியாசமான உணர்வுடன் தோன்றுவதும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47