கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

16 Jul, 2026 | 04:47 PM
image

கொழும்பு வடக்கு பகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த மக்களின் பார்வை நலனை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 400 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் சமூக சேவை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.

கொட்டாஞ்சேனை ஸ்ரீ தீபதுராம விகாரையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு லயன்ஸ் கழகத்தின் கொழும்பு நகர பிரிவு உறுப்பினர்கள் பிரதான அனுசரணை வழங்கினர்.

நிகழ்வில் கயான் லக்மால் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அவர், பார்வைக் குறைபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிந்து தேவையான உதவிகளை வழங்குவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கிய சமூகப் பணியாகும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், லயன்ஸ் கழகம் இன்டர்நெசனலின் 306 D5 மாவட்டத்தின் பல லயன்ஸ் கழக உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்று, பொதுமக்களுக்கு கண்ணாடிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சமூக சேவைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பை லயன் மனோகரன் மற்றும் லயன் ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர்.

பார்வைக் குறைபாடுடைய வசதி குறைந்த மக்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்ட இந்த மனிதாபிமான முயற்சி, சமூக நலன் மற்றும் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் லயன்ஸ் கழகத்தின் தொடர்ச்சியான சேவைகளில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76...

2026-08-18 16:14:07
news-image

பெருந்தோட்டங்கள், வடக்குப் பகுதியில் சாதனை படைக்கும்...

2026-08-18 17:33:07
news-image

ருவான்வெல்ல கோணகல்தெனிய ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2026-08-17 12:24:15
news-image

இலங்கை ஊடகர்களுக்கு முதன்முறையாக பெருமளவில் உதவித்...

2026-08-17 15:56:41
news-image

நல்லூர் கந்தன் நூல்வெளியிடும் யாழ் விருது...

2026-08-17 11:06:55
news-image

அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

2026-08-16 17:02:09
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண...

2026-08-16 16:40:38
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்: சம்பிரதாயப்...

2026-08-16 16:31:53
news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57