இலங்‍­கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீர­ரான ஜய­நந்த வர்­ண­வீர தங்­கி­யி­ருந்த பாணந்­துறை தல்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள விடுதி ஒன்­றி­லி­ருந்து அவ­ருக்கு சொந்­த­மான சுமார் 8 இலட்சம் பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்கள் மற்றும் பணம் எனபன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ்நிலையில்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

நண்­பர்கள் இரு­வரை சந்­திப்­ப­தற்­காக சில தினங்­க­ளுக்கு முன்­ குறித்த விடுதியில் தங்­கு­வ­தற்­காக வந்­தி­ருந்த 56 வய­தான வர்­ண­வீர கடந்த முதலாம் திகதி அங்கு  வந்­தி­ருந்த நிலையில் குறித்த விடு­தியில் அவ­ரது நண்­பர்கள் இரு­வரும் வர்­ண­வீ­ரவை தங்­க­வைத்து விடு­தி­யி­லி­ருந்து சென்­றதன் பின்னர் அன்­றைய தினம் இரவு 10.30 மணி­ய­ளவில் நித்­தி­ரைக்கு சென்­ற­தாக வர்­ண­வீர பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­துள்ளார்.

மறுநாள் அதி­காலை 5 மணி­ய­ளவில் எழுந்து பார்த்­த­போது அங்­கி­ருந்த விடு­தியின் ஊழி­ய­ரொ­ருவர் அறையின் ஜன்னல் திறந்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். அத­னை­ய­டுத்து அறையை சோத­னை­யிட்ட போது முதல் நாள் நித்­தி­ரைக்கு செல்ல முன்னர் அறை­யி­லுள்ள கண்­ணாடி மேசையின் மீது துணி­யொன்றில் சுற்­றி­ய­வாறு கழற்றி வைத்­தி­ருந்த தான் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கிலி, கைச்­சங்­கிலி மற்றும் பணம் என்­பன திருட்டுப் போயுள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்­னரும் வர்­ண­வீர இதே விடு­தியில் தங்­கி­யி­ருந்த சந்­தர்ப்­ப­மொன்றில் அவ­ரது 35 000 ரூபா பெறு­ம­தி­யான ஆப­ர­ணங்­களும் இவ்­வாறு திருட்­டுப்­போ­ன­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். சம்­பவ தினத்­தன்று குறித்த விடு­தியில் 5 பணி­யா­ளர்கள் மாத்­தி­ரமே சேவையில் இருந்­த­தா­கவும் விடு­தியின் சீ.சீ.ரி.வி. கெம­ராக்கள் வேறு திசை­நோக்கி திருப்­பப்­பட்டு காணப்­பட்­டன என்றும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

தல்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள இந்த விடு­தியில் அடிக்­கடி இவ்­வா­றான திருட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் அண்­மைய காலங்­களில் அங்கு தங்­கி­யி­ருந்த வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­க­ளது பல இலட்சம் பெறு­ம­தி­யான உடை­மை­களும் இவ்­வாறே திருட்டுப் போயுள்­ள­தா­கவும் பொலிஸ் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­துள்ளார். இச்­சம்­பவம் தொடர்பில் விடு­தியின் ஊழி­யர்கள் மற்றும் முகா­மை­யா­ள­ரிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக பாணந்­துறை தெற்கு பொலிஸார் ­மை­களும் இவ்­வாறே திருட்டுப் போயுள்ளதாகவும் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விடுதியின் ஊழியர்கள் மற்றும் முகாமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.