கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (16) வியாழக்கிழமை பகல் 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் சிவஞானம் ஸ்ரீதரன் அர்ச்சனா இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கிளிச்சி மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு திருவையாறு பகுதியில் விவசாய அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறுதாணிய மற்றும் நிலக்கடலை உற்பத்தி அபிவிருத்தி திட்டம் கைவிடப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவால் கேள்வி எழுப்பப்பட்டமை
கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஆற்றொதுக்கு காணியை ஆக்கிரமிப்பு செய்து தனது வீட்டுக்குச் செல்லும் வீதிக்கு 3.5 மில்லியன் அரச நிதியில் பாலம் அமைத்துள்ளமை தொடர்பாகவும் இதற்கு அதிகாரிகள் துணைபோயுள்ளதாகவும் உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சனா இராமநாதன் அவர்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குழப்பம் ஏற்பட்டதால் குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டு போலீசார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறியுள்ளார் அத்துடன் அரச அதிகாரிகளும் இக் கூட்டத்திலிருந்து வெளியேறி இருந்தனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM