நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - தினன தகுண!

16 Jul, 2026 | 04:07 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த அமைப்புரீதியான மாற்றத்தைப் பிற்போடுவது மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளைக் காட்டிக்கொடுக்கும் ஒரு செயலாக அமைந்துவிடும் என தினன தகுண வலியுறுத்தியுள்ளது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அண்மையில் நடத்திய சமூகக் குறிகாட்டி கருத்துக்கணிப்பின் மூலம் வெளிவந்துள்ள உண்மை அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான யதார்த்தங்களை ஆராய்ந்து அக்கூட்டமைப்பின் தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழு விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பான்மையானோர், அதாவது 64.1 சதவீதமானோர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பலமான ஆதரவை வழங்கியுள்ளனர். இவர்களில் 40.5 சதவீதமானோர் இது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய முன்னுரிமை அல்ல என்று குறிப்பிட்ட போதிலும், ஒட்டுமொத்த மக்கள் ஆணை அமைப்புரீதியான மாற்றத்தை நோக்கியே அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

அமைப்புரீதியான மாற்றத்தின் வாக்குறுதியுடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனவே, தங்களது சொந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பை அவர்கள் தாமதப்படுத்தினால், அது பெரும் அரசியல் அதிருப்திக்கு வழிவகுக்கும்.

அதேபோல், நாட்டில் ஜனநாயகப் பரவலாக்கத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது முக்கியம் என 67.0 சதவீத மக்கள் கருதுகின்றனர். இந்த உணர்வு 63.4 சதவீதம் முதல் 70.4 சதவீதம் வரை அனைத்து இனக் குழுக்களிடையேயும் பொதுவாகக் காணப்படுகிறது.

இந்தத் தேர்தல்களை நடத்தத் தவறியதன் மூலம், அரசாங்கம் பரவலாக்கப்பட்ட ஜனநாயக ஆணையைத் தீவிரமாகப் புறக்கணித்து வருகிறது என்பதை நன்கு அறிந்திருந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் இன்னமும் அரசாங்கத்திற்குப் பலமான ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

மாகாண சபைகளை உள்ளூர் நிர்வாகம் மற்றும் அதிகாரப் பகிர்வுக்கான இன்றியமையாத கருவியாகக் கருதும் தமிழர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களில் பெரும்பான்மையானோர் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிப் பண்பாட்டிற்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த மக்கள் ஆதரவுக்கு முக்கிய காரணம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்கும் இடையே காணப்படும் ஆளுமை மற்றும் நம்பிக்கையின் இடைவெளியாகும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் 75.5 சதவீத என்ற உயர் மக்கள் ஆதரவை அனுபவிக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் 64.9 சதவீத என்ற உயர் அதிருப்தியால் பாதிக்கப்பட்டுள்ளமை கருத்துக்கணிப்பில் காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஜனாதிபதியை நல்லெண்ணம் கொண்ட, ஊழலற்ற மற்றும் திறமையான ஒரு தலைவராகப் பார்க்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரை வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பழைய அரசியல் கட்டமைப்பின் பிரதிபலிப்பாகவே பார்க்கிறார்கள். இதனால், எதிர்க்கட்சியில் உள்ள மாற்று வழிகளை விட, தாங்கள் நம்பும் ஒரு தலைவரின் கீழ் நிலவும் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள்.

எனவே, எதிர்க்கட்சியானது தன்னை பழைய நிலைக்கு மீண்டும் திரும்புபவராக அல்லாமல், பொதுமக்கள் கோரும் உண்மையான ஜனநாயக சீpருத்தங்களின் உண்மையான பிணையாளராகத் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50