(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிரான பீபா உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி வெற்றியை தொடர்ந்து, மைதானத்தில் போக்லண்ட் தீவுகள் தங்கள் நாட்டுக்கு சொந்தம் என்ற கோரிக்கைக்கு ஆதரவான பதாகையை ஏந்தி ஆர்ஜன்டீனா வீரர்கள் கொண்டாடினர்.
இதன் காரணமாக சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் (பீபா) ஒழுக்காற்று நடவடிக்கையை ஆர்ஜன்டீனா எதிர்கொள்ளக்கூடும் என கூறப்படுகிறது.

அட்லான்டா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் நிறைவுக்கு வந்த அரை இறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பிலிருந்து வியக்கவைக்கும் வகையில் மீண்டுவந்த நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வெற்றிகொண்டது.
இந்த வெற்றியை அடுத்து நியூ ஜேர்சியில் ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி திங்கட்கிழமை நடுச்சாமம் 12.30 மணி) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெய்னை ஆர்ஜன்டீனா எதிர்த்தாடவுள்ளது.
இங்கிலாந்துடனான போட்டி முடிவடைந்த பின்னர் ஆர்ஜன்டீனா வீரர்கள் 'லாஸ் மெல்வினாஸ் சன் ஆர்ஜன்டினாஸ்' ("Las Malvinas son Argentinas") என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி தங்களது வெற்றியைத் கொண்டாடினர்.
இதன் பொருள் 'போக்லண்ட் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை' என்பதாகும்.
தென்மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடல் கடந்த பிராந்தியமான போக்லாந்து தீவுகள், பிரிட்டனுக்கும் ஆர்ஜன்டினாவுக்கும் இடையிலான இறையாண்மை சர்ச்சைக்குரிய விடயமாக இன்னும் நீடிக்கிறது.
ஆர்ஜன்டினாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவுக்கூட்டத்திற்காக, 1982 ஏப்ரல் முதல் ஜூன் வரை இரண்டு நாடுகளும் போரில் ஈடுபட்டன.
74 நாட்கள் நீடித்த இந்த ஆயுதப் போரில் 655 ஆர்ஜன்டினா மற்றும் 255 பிரித்தானிய இராணுவ வீரர்கள் பலியானார்கள். அத்துடன் போக்லண்ட் தீவுகளைச் சேர்ந்த மூன்று பொதுமக்களும் இதில் பலியாகினர்.

சுலோவேனியாவுக்கு எதிராக 2014இல் நடைபெற்ற சிநேகபூர்வ சர்வதேச போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இதே வாசகங்களைக் கொண்ட பதாகையை ஆர்ஜன்டீனா வீரர்கள் பிடித்துக்கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து ஆர்ஜன்டீனா கால்பந்hட்ட சங்கத்திற்கு 20000 பவுண்ட்களை அபராதமாக பீபா விதித்திருந்தது.
அரசியல் செயல்பாடு மற்றும் அணியின் தவறான நடத்தை குறித்த விதிகளை இந்தச் செயல் மீறியுள்ளதாக பீபா அப்போது தெரிவித்திருந்தது.
இப்போது 12 வருடங்கள் கழித்து ஆர்ஜன்டீனா வீரர்கள் அந்த விதிமுறைகளை மீண்டும் மீறியுள்ளதால் பீபா நடவடிக்கை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM