புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

Published By: Digital Desk 3

16 Jul, 2026 | 02:01 PM
image

இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், இன்று (16) வியாழக்கிழமை  அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

புதிய கடற்படைத் தளபதி தனது பதவியேற்பின் பின்னர், பிரதமரைச் சந்தித்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படை ஆற்றும் பங்களிப்பு, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகள் குறித்து இச்சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது, புதிய கடற்படைத் தளபதிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் நலன்புரிச் சேவைகளுக்காகக் கடற்படை ஆற்றிவரும் தனித்துவமான சேவைகளைப் பாராட்டியதுடன், அவரது புதிய பதவியின் கீழ் கடமைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களும் கலந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13