சுற்றாடல் அமைச்சு, ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டக் குழு இணைந்து 204 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் கைச்சாத்து

16 Jul, 2026 | 01:03 PM
image

இலங்கையின் விவசாயத் துறையில் உள்ள நிலங்களில் கரிம  மாசுபடுத்திகள் (POPs) கொண்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள இரசாயன மற்றும் கழிவுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அகற்றல் தொடர்பான திட்டத்தின் கீழ் சுற்றாடல் அமைச்சும் இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டக் குழுவும் (UNDP) இணைந்து (இத்திட்டம் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி - GEF நிதியுதவியுடன் செயற்படுத்தப்படுகிறது), பெறுமதியான ஆய்வக உபகரணங்களை நேற்று (15) முக்கிய தேசிய நிறுவனங்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தன. 

சுமார் 204 மில்லியன் ரூபாய் (663ஆயிரம் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான உபகரணங்கள் இதன்போது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வானது சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மத்திய சுற்றாடல் அமைச்சின் சப்ரகமுவ பல்கலைக்கழகம், விவசாயத் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய ஆறு பயனாளி நிறுவனங்களிடம் இந்த உபகரணங்கள் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டன.

மேலும், அவ்வேளை புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (MoUs) கையெழுத்திடப்பட்டன.

உபகரணங்களின் நீண்ட கால தொழில்நுட்ப மற்றும் நிதிசார் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்த விளக்கக்காட்சியும் இதன்போது காண்பிக்கப்பட்டன. 

நவீன பகுப்பாய்வுக் கருவிகள், ஆய்வகத் துணை உபகரணங்கள், பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஆகியவை பாதரசம், நிலைத்திருக்கும் கரிம மாசுபடுத்திகள் (POPs) மற்றும் கவலைக்குரிய பிற வேதிப்பொருட்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களை கண்டறிதல், பகுப்பாய்வு செய்தல், கண்காணித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றில் இலங்கையின் திறனை கணிசமாக வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.  

இறக்குமதி மற்றும் எல்லைக் கட்டுப்பாடு முதல் சந்தை கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி வரையிலான வேதிப்பொருட்களின் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் ஒழுங்குமுறை மேற்பார்வையை இந்த முதலீடு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சுற்றாடல்  பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி,  இத்திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

"தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கு இணங்க, அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் கையாள்வது உறுதி செய்வதில் இலங்கை உறுதியுடன் உள்ளது. 

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் இயற்கைச் சூழலை பேணுவதிலும் முக்கிய பங்காற்றும் நிறுவனங்களின் அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை சார் திறன்களை, இன்று கையளிக்கப்பட்ட உபகரணங்கள் வலுப்படுத்தும். இந்த முதலீடு நாட்டிற்கு நீண்டகாலப் பலன்களை அளிப்பதோடு, பசுமையான மற்றும் பேரிடர்- தாங்கும் திறன் கொண்ட எதிர்காலத்தை நோக்கிய நமது பயணத்தையும் வலுப்படுத்தும்" என்று அவர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சகத்தின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நிறுவன ரீதியான திறன்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

"இலங்கையானது பாசல் (Basel), ரோட்டர்டாம் (Rotterdam), ஸ்டாக்ஹோம் (Stockholm) மற்றும் மினமாட்டா (Minamata) ஆகிய உடன்படிக்கைகளில் ஒரு தரப்பு நாடாக உள்ளது. பாசல், ஸ்டாக்ஹோம் மற்றும் மினமாட்டா உடன்படிக்கைகளுக்கு தேசிய மையப்புள்ளியாக (National Focal Point) செயற்படும் சுற்றுச்சூழல் அமைச்சு, இந்த பன்முக சுற்றாடல்  உடன்படிக்கையின் கீழ் நாடு தனது கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதி செய்யும் பொறுப்பை கொண்டுள்ளது. 

அத்துடன், அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் பாதகமான தாக்கங்களிலிருந்து மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான கடமையாகும்.

இத்துறையில் UNDP-யின் தலைமைத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த, UNDP இலங்கையின் பொறுப்பு அதிகாரி மெரினா டென்,

“இந்த ஒப்படைப்பு என்பது வெறும் உபகரணங்களை வழங்குவதை விட மிக மேலானது. அபாயகரமான இரசாயனங்கள் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களிலிருந்து சமூகங்களையும் சூழல் மண்டலங்களையும் பாதுகாக்கத் தேவையான கருவிகள், அறிவு மற்றும் அமைப்புகளைக் கொண்டு தேசிய நிறுவனங்களுக்கு வலுவூட்டுவது இதன் நோக்கமாகும். 

சுற்றாடல் அமைச்சின் இந்தக் கூட்டு மற்றும் உலகளாவிய சூழல் வசதியின் ஆதரவின் மூலம் நிலையான அபிவிருத்தி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, உலகளாவிய சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் திறனை பலப்படுத்த நாங்கள் உதவுகிறோம்” என்று எடுத்துரைத்தார்.

வளர்ந்து வரும் நாடான இலங்கை, சூழல் சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், அபாயகரமான பிளாஸ்டிக் இரசாயன கழிவுப் பொருட்கள் மற்றும் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, சட்ட அமலாக்கம், கண்காணிப்பு மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகிய நடவடிக்கைகளுக்கு, பலப்படுத்தப்பட்ட ஆய்வகக் கட்டமைப்பு முக்கிய பங்காற்றும் என்றும் இதன்போது பேசப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13