தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை வெற்றிகொண்ட ஆர்ஜன்டீனா இறுதிக்கு முன்னேறியது

16 Jul, 2026 | 09:29 AM
image

(நெவில் அன்தனி)

அட்லான்டாவில் புதன்கிழமை நடைபெற்ற மிகவும் பரபரப்பான இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து ஆட்டத்தின் பிற்பகுதியில் இரண்டு கோல்களைப் போட்ட ஆர்ஜன்டீனா 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்த வெற்றியுடன் நியூ யோர்க், நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெறவுள்ள உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் ஸ்பெய்னை நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா எதிர்த்தாடும்.

இப் போட்டியில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்தின் உலகக் கிண்ண கனவு சிதறிப்போனதுடன் அணி வீரர்களும் முகாமைத்துவத்தினரும் பெரும் வேதனை அடைந்தனர்.

தோல்வி அடைந்த இங்கிலாந்து 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பிரான்ஸை எதிர்த்தாடும். இப் போட்டி மியாமி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

அட்லான்டா விளையாட்டரங்கில் திரண்டிருந்த 68,000க்கும் மேற்பட்ட ரசிகர்களை ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பில் ஆழ்த்திய அரை இறுதிப் போட்டியில் 33ஆவது நிமிடம் வரை எந்த அணியும் கோல் போடுவதற்கு ஒரு முயற்சியைக்கூட எடுக்கவில்லை.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் கொல் போட எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இதன் காரணமாக இடைவேளையின்போது கோல் நிலை பூஜ்ஜியமாக இருந்தது.

இடைவெளைக்குப் பின்னர் 55ஆவது நிமிடத்தில் மோர்கன் ரொஜர்ஸ் வலதுபுறத்தில் இருந்து பரிமாறிய பந்தை அன்தனி கோர்டன் 6 யார் கட்டத்தின் விளிம்பில் இருந்தவாறு கோலினுள் புகுத்தி இங்கிலாந்தை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆர்ஜன்டீனாவின் பல முயற்சிகள் இலக்கு தவறிப்போயின. அதேவேளை, இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோன் பிக்ஃபோர்ட் குறைந்தது மூன்று நிச்சயமான கொல்களைத் தடுத்த நிறுத்தினார்.

அதேபோன்று ஆர்ஜன்டீனா கோல்காப்பாளர் எமிலியானோ மார்ட்டினஸும் எதிரணி  விரர்களின் முயற்சிகளைத் தடுத்த வண்ணம் இருந்தார்.

போட்டி முழு நேரத்தைத் தொடுவதற்கு 5 நிமிடங்கள் இருந்தபோது இங்கிலாந்து தொடர்ந்தும் முன்னிலையில் இருந்தது.

அப்போது லியோனல் மெஸ்ஸி வலது புறத்தில் இருந்து தாழ்வாக பரிமாறிய பந்தை இடது காலால் கட்டுப்படுத்திய என்ஸோ பெர்னாண்டஸ் சுமார் 22 யார் தூரத்திலிருந்து வலது காலால் உதைத்து கோலாக்கி கோல் நிலையை ஆர்ஜன்டீனா சார்பாக 1 - 1 என சமப்படுத்தினார்.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் (90+2 நி.) மீண்டும் லியோனல் மெஸ்ஸி வலப்புறத்திலிருந்து உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கித் தாவிய லவ்டாரோ மார்ட்டினஸ் தனது தலையால் முட்டி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு ஆர்ஜன்டீனாவை 2 - 1 என முன்னிலையில் இட்டார்.

அதனைத் தொடர்ந்து உபாதையீடு நேரம் மேலும் 10 நிமிடங்கள் நீடித்த போதிலும் ஆர்ஜன்டீனா தனது வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44