பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் HIV தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Published By: Vishnu

16 Jul, 2026 | 07:11 AM
image

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அறிவியல் அடிப்படையிலான பாலியல் கல்வி அறிவை வழங்குவதற்கான “தேசிய பாலியல் கல்வி தகவல் தொடர்பு வழிகாட்டுதல்கள்” (National Sexuality Education Communication Guidelines) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதல்கள் புதன்கிழமை (15) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பாலியல் கல்வியைத் தடுக்கும் தரப்பினர் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கும், HIV உள்ளிட்ட பாலியல் தொடர்பான நோய்கள் பரவுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சரியான வயதுக்கேற்ற, அறிவியல் ரீதியான தகவல்களை வழங்குவது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முக்கிய நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21