இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் புதுடில்லியில் நடைபெற்று வரும் பாரத் டெக்ஸ் சர்வதேச ஆடை வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்த வேளையில், இந்திய ஆடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்களைச் சந்தித்து இரு நாடுகளினதும் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் பயனுள்ள வகையில் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், கைத்தறித் துறையின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு வழங்கப்பட்ட இரண்டு வார கால விசேட பயிற்சித் திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கைத் தரப்பால் மனமார்ந்த நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2027' நிகழ்வில் பங்கேற்குமாறு இந்திய ஆடைத்துறை அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் முன்னணி வர்த்தக முயற்சியாளர்களுக்கு இதன்போது உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்புகள் மற்றும் திறமையான மனிதவளத்தின் ஆற்றல்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹீஷினி கொலன்னே உட்பட இரு நாடுகளினதும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM