(க.சிவலிங்கமூர்த்தி)
சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிவதுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ள தற்போதைய சட்ட திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து அரசாங்கம் ஏற்கனவே தீவிர கவனம் செலுத்தியுள்ளது. நாமல் ராஜபக்ச போன்றவர்கள் எமக்கு இது குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
தொழில் அமைச்சில் புதன்கிழமை (15) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் வர்த்தகர்களைப் பாதுகாத்து, நாடு முழுவதும் போதைப்பொருள் பரவுவதுக்கு வழிவகுத்தவர்கள் இன்று சிறைச்சாலைகள் நிறைந்து வழிவது குறித்தும் மாற்று வழிகள் குறித்தும் பேசுவது வேடிக்கையானது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகச் சென்று தழுவிக் கொண்டவர்கள் இன்று எப்படி பேசுகிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த காலத்தில் நாட்டில் போதைப்பொருள் வியாபிப்பதுக்கு யார் காரணமாக இருந்தார்கள், அதற்குப் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.
இன்று நாம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருவதால் அவர்கள் பதற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஆலோசனைகள் எமக்குத் தேவைப்படவில்லை.
வீடுகளில் இருந்தவாறு சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வீட்டுச் சிறை முறையை அறிமுகப்படுத்துமாறு அவர் தற்போது கூறுகிறார். ஆனால் அவர் இதனைச் சொல்வதுக்கு முன்னரே அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தி சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதுக்கான ஆரம்பக் கட்டப் பணிகளை முன்னெடுத்துள்ளது.
எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டங்களின் மூலம் இந்த வீட்டுச் சிறை முறைக்கான ஒழுங்குவிதிகள் உள்ளடக்கப்படும். எவ்வாறான கைதிகளுக்கு இந்த வீட்டுச் சிறை முறைமை பொருந்தும் என்பதை நீதி அமைச்சு மற்றும் அது சார்ந்த துறையினரே தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பான முதற்கட்ட ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதுடன், அண்மையில் நீதி அமைச்சரும் பாராளுமன்றத்தில் இது தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருந்தார். எனவே, நாட்டுக்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவதுக்கு அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM