(நெவில் அன்தனி)
பீபா உலகக் கிண்ண 23ஆவது அத்தியாயத்தில் இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனாவுக்கும் முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டி அட்லான்டா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆர்ஜன்டீனா ஆறாவது தடவையாகவும் தொடர்ச்சியான இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சிக்கவுள்ளது.
அதேவேளை, 1990இலும் 2018இலும் இறுதி ஆட்ட வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்துக்கு உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.
ஆர்ஜன்டீனா தனது முதலாவது போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் ஹெட்-ட்ரிக் கோல்களுடன் 3 - 0 என அல்ஜீரியாவையும் தொடர்ந்து ஆஸ்திரியா (2 - 0), ஜோர்தான் (3 - 1) ஆகிய அணிகளையும் இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.

ஆனால், நொக் அவுட் சுற்று ஆர்ஜன்டீனாவுக்கு இலகுவாக அமையவில்லை.
காபோ வேர்டே அணியுடனான 32 அணிகள் சுற்றில் ஆர்ஜன்டீனா கடும் சிரமத்தை எதிர்நோக்கியுதுடன் மேலதிக நேரத்தில் காபோ வேர்டே வீரர் போர்ஜஸ் போட்டுக் கொடுத்த சொந்த கோலே அவ்வணிக்கு 3 - 2 என்ற வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.
தொடர்ந்து 16 அணிகள் சுற்றில் எகிப்திடம் 0 - 2 என 78ஆவது நிமிடம் வரை பின்னிலையில் இருந்த ஆர்ஜன்டீனா 13 நிமிடங்கள் இடைவெளியில் உபாதையீடு நேர கோல் உட்பட 3 கோல்களைப் போட்டு வெற்றியீட்டியது.
சுவிட்ஸர்லாந்துக்கு எதிரான கால் இறுதிப் போட்டியிலும் மேலதிக நேரத்திலேயே ஆர்ஜன்டீனா 3 - 1 என வெற்றிபெற்றது.

இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் கோல் போடப்படாமல் வேற்றிதோல்வியின்றி முடிவடைந்த கானாவுடனான போட்டி மாத்திரமே அவ்வணிக்கு சிரமத்தைக் கொடுத்தது. குரோஷியா (4 - 2), பனாமா (2 - 0) ஆகிய அணிகளுக்கு எதிரான முதல் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து இலகுவாக வெற்றிபெற்றது.
32 அணிகள் சுற்றில் கொங்கோவிடம 74ஆவது நிமிடம் வரை 0 - 1 என பின்னலையில் இருந்த இங்கிலாந்து 11 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்டு வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.
16 அணிகள் சுற்றில் வரவேற்பு நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து ஒருவாறு 3 - 2 என வெற்றிபெற்றது.
நோர்வேக்கு எதிரான கால் இறுதிப் போட்டியிலும் ஒரு கோல் பின்னிலையில் இருந்து மீண்டுவந்தே இங்கிலாந்து மேலதிக நேரத்தில் வெற்றிபெற்றது.

நொக் அவுட் சுற்றைப் பொறுத்தமட்டியல் ஆர்ஜன்டீனாவும் இங்கிலாந்தும் கடினமான பாதைகளைக் கடந்த வந்ததால் அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற இரண்டு அணிகளும் கடுமையாக போராட வேண்டி வரும் என கூறத்தோன்றுகிறது.
உலகக் கிண்ண வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் 5 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. இங்கிலாந்து 3 வெற்றிகளையும் ஆர்ஜன்டீனா 2 வெற்றிகளையும் ஈட்டியுள்ளன.
இரண்டு அணிகளும் சிநேகபூர்வ சர்வதேச போட்டிகள் உட்பட 14 போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 6 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. 5 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
அணிகள் (பெரும்பாலும்)
ஆர்ஜன்டீனா: எமிலியானோ மார்ட்டினெஸ் (கோல் காப்பாளர்), நிக்கலஸ் டெக்லியாஃபிக்கோ, லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ், கிறிஸ்டியன் ரொமீரோ, நஹுவெல் மொலினா (நால்வரும் பின்கள வீரர்கள்), லியண்ட்ரோ பரதெஸ், ரொட்றிகோ டி போல், அலெக்சிஸ் மெக் அலிஸ்டர், என்ஸோ பெர்னாண்டெஸ் (நால்வரும் மத்திய கள வீரர்கள்), லியோனல் மெஸ்ஸி (தலைவர்), ஜூலியன் அல்வாரெஸ் (இருவரும் முன்கள வீரர்கள்).
இங்கிலாந்து: ஜோர்டன் பிக்ஃபோர்ட் (கோல் காப்பாளர்), எரிஸ் கொன்சா, நிக்கோ ஓ'ரெய்லி, ரீஸ் ஜேம்ஸ், மார்க் குவேஹி (நால்வரும் பின்கள வீரர்கள்), டெக்லான் ரைஸ், எலியட் அண்டர்சன், புக்காயோ சாக்கா, ஜூட் பெலிங்ஹாம் (நால்வரும் மத்தியகள வீரர்கள்), ஹெரி கேன் (தலைவர்), அன்தனி கோர்டன் (இருவரும் முன்கள வீரர்கள்)














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM