சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது - சுரேன் ராகவன் 

15 Jul, 2026 | 07:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்று பத்து நாட்கள் கடந்தும் அரசாங்கத்தினால் அதுதொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்,

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இன்று (15) கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் காரியாலயத்துக்கு சென்று அதன் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிரான்ச்சை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின் சட்டத்துறையில் பிரதான பகுதியாக விளங்கும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில்  ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியை சந்தித்து விளக்கமளித்தோம். அந்த சந்தர்ப்பத்தில் அவர் கேட்ட கேள்விகளுக்கும் எமக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இச்சம்பவம் நடந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. ஆனால் அரசாங்கத் தரப்பிலிருந்து இதுவரை இடைக்கால அறிக்கை அல்லது உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் குறித்து நேற்று நான் அறிந்துகொண்டேன். சட்டத்துறையில் உள்ள அனைவரும் கூறும் ஒரு விடயம் என்னவென்றால், இவ்வாறானதொரு சம்பவத்தின் போது குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தும் சட்டத்தின்படி, தோட்டாக்களுக்குப் பதிலாக ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை போன்றவற்றை பயன்படுத்தியிருக்கலாம் என்பதாகும். 

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உயர்கல்வி அமைச்சராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்துள்ளார். வீதிப் போராட்டங்களின்போது குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தும் கொள்கையையே நாம் பின்பற்றியுள்ளோம். அப்படியாயின் இந்த சம்பவத்தின்போது ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை?

33 பேரின் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன, அவர்களில் 10 பேர் அதிகாரிகள். இதுவரை எந்தவொரு நீதிமன்றமும் இவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கவில்லை. அப்படியாயின் அவர்களின் வாழும் உரிமையைப் பறித்தது யார்? வாழும் உரிமை என்பது ஒரு அடிப்படை சர்வதேச சட்டமாகும், இது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அரசாங்கம் ஒரு முறைமை மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். சட்டத்தின் ஆட்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை, உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், முறையான கல்வி போன்ற உரிமைகளை உறுதிப்படுத்தும் என்று நம்பினர்.

இன்று அரசாங்கத்தில் உள்ளவர்கள், அன்று எதிர்க்கட்சியில் இருந்து செயற்பட்டது போன்று, வன்முறைகளில் ஈடுபடவோ அல்லது வேலைநிறுத்தம் செய்து மாலை நான்கரைக்கு வீட்டிற்குச் செல்பவர்களை வீதிகளில் முடக்கவோ நாம் விரும்பவில்லை. 

ஜனநாயகம் என்பது அதுவல்ல. 21ஆம் நூற்றாண்டின் ஜனநாயகம் என்பது பிறருக்குச் செவிசாய்த்து, கலந்தாலோசனைகளுடன் பங்களிப்புடன் தான் பிறந்த நாட்டுக்கும், தான் அரசியல் செய்யும் நாட்டுக்கும் நன்மைகளைச் செய்வதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50