ஆங் சான் சூகிக்கு வழங்­கப்­பட்ட கௌரவ பட்டம் பறிமுதல்

Published By: Priyatharshan

05 Oct, 2017 | 10:56 AM
image

மியன்­மாரின் ஜன­நா­யகத் தலைவர் ஆங் சான்  சூகிக்கு  ஜன­நா­ய­கத்தை  நிலை­நாட்ட   அவர் மேற்­கொண்ட நீண்ட கால போராட்­டத்­திற்­காக  1997  ஆம் ஆண்டு  தன்னால் வழங்­கப்­பட்ட கௌரவ ஒக்ஸ்போர்ட் சுதந்­திர பட்­டத்தை பிரித்­தா­னிய  ஒக்ஸ்போர்ட் நகர சபை  பறி­முதல் செய்­துள்­ளது.

 அவர்  அந்தப் பட்­டத்தை இனி­மேலும் பெற்­றி­ருப்­பது சரி­யா­ன­தல்ல என அந்த சபை குறிப்­பிட்­டுள்­ளது. ஆங் சான் சூகியின் கௌரவ பட்­டத்தை பறி­முதல் செய்­வ­தற்கு தான் ஆத­ர­வ­ளித்­துள்­ளதை ஒக்ஸ்போர்ட் நகர சபையின் தலைவர்  பொப் பிறைஸ்  உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். 

மியன்­மாரின் ராகைன் பிராந்­தி­யத்தில் அண்­மையில் இடம்­பெற்ற வன்­மு­றை­களால் அந்தப் பிராந்­தி­யத்­தைச்­சேர்ந்த அரை மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான ரோ­ஹிங்யா முஸ்­லிம்கள் நாட்டை விட்டு இடம்­பெ­யர்ந்து  அயல் நாடான பங்­க­ளா­தேஷை தஞ்­ச­ம­டைந்­துள்ள நிலையில்  ஆங் சான் சூகி அது தொடர்பில் பாரா­மு­க­மாக இருப்­ப­தற்கு கண்­டனம் தெரி­வித்தே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் நிலை­யங்கள் மீது ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த கிளர்ச்­சி­யா­ளர்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தை­ய­டுத்­து அங்கு வன்­மு­றை கள் கிளர்ந்­தெ­ழுந்­தன. ஆங் சான் சூகி மியன்­மாரை இரா­ணுவ சர்­வா­தி­கார ஆட்­சி­யி­லி­ருந்து விடு­விக்கும் போராட்­டத்தில்  பல வரு­டங்­களை வீட்டுக் காவலில் கழித்­த­வ­ராவார்.

 தொடர்ந்து  2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற  தேர்­தலில் அவ­ரது கட்சி  பெரும் வெற்­றியைப் பெற்று ஆட்­சியைக் கைப்­பற்­றி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் ராகைன் பிராந்­தி­யத்தில் ரோஹி ங்யா இன மக்­க­ளுக்கு எதி­ராக இரா­ணு­வத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் வன்­மு­றை­களை தடுத்து நிறுத்தத் தவ­றி­யமை கார­ண­மாக அவர் சர்­வ­தேச ரீதி­யான கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யுள்ளார். 

ரோஹிங்யா முஸ்­லிம்கள் தொடர்பில் ஆங் சான் சூகி  நட­வ­டிக்கை எத­னையும் எடுக்க முயற் சிக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஏனைய அமைப்புகளும் அவருக்கு தம்மால் வழங்கப்பட் டுள்ள  கௌரவ பட்டங்களை வாபஸ் பெறுவது குறித்து ஆராய்ந்து  வருவதாக தெரிவிக்கப் படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33